இஸ்கந்தர் புத்தேரி, நவம்பர் 18 :
காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது சிறுவன், இங்குள்ள புக்கிட் இண்டாவில் உள்ள அவனது வீட்டிற்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 17) பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டான்.
தேசிய முன்னணியின் இஸ்கந்தர் புத்தேரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், டத்தோ ஜேசன் தியோ கூறுகையில், அந்த சிறுவன் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. குறித்த சிறுவன் நேற்று வியாழன் மாலை 3 மணியளவில் சிறுவனது வீட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
சிறுவன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர்கள் தங்கள் போலீஸ் அறிக்கையையும் நேற்று திரும்பப் பெற்றுள்ளனர்,” என்று இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 18) தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.