பதின்ம வயது சிறுமியுடன் இருக்கும் பெண்ணை கொடூரமாக தாக்கும் காணொளி குறித்து போலீசார் விசாரணை

காஜாங்: திகிலுடன் அழும் பதின்ம வயது சிறுமியுடன் இருக்கும்  ஒரு பெண்ணைத் தாக்கும் வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று காஜாங் OCPD உதவி  முகமது ஜைத் ஹாசன் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஒரு நிமிடம் நீளும் அந்த வீடியோவில், சட்டை அணியாத ஆண் ஒருவர் அந்தப் பெண்ணின் தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அடிப்படை காணலாம்.

அந்த ஆண் ஒரு கதவைத் திறந்து அந்தப் பெண்ணை அவளது தலைமுடியைப் பிடித்து வேறொரு அறைக்குள் இழுத்துச் சென்றபோது அந்த  பதின்ம வயது சிறுமி அலறி அழுவதை காண முடிந்தது.

அந்த நபர் பெண்ணை சமையலறைக்குள் இழுத்துச் சென்று பலமுறை எட்டி உதைக்க, அந்த பெண்   காணொளி பார்ப்பவர்களிடம் தலையிடும்படி கெஞ்சுவதைக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here