மழையிலும் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

GE15   தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் மழையை பொருட்படுத்தாமல்  நீண்ட வரிசையில்  காத்திருந்தனர்.     SJKC புக்கிட் செர்டாங்கிற்குச் செல்லும் வாக்காளர்கள் வாக்களிக்க தங்கள் நிலைப்பாட்டில் அசையாமல் இருந்தனர்.

காலை 9 மணிக்கு வந்த சுங் மே யீ  என்பவர் தனது அம்மா 60 வயதைக் கடந்தவர் என்பதால் நேரடியாக நுழைவாயிலுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் வரிசையில் நின்றதாகவும்   காலை 11 மணி வரையிலும் கூட்டம் குறையவில்லை எனவும் கூறினார்.

36 வயதான அலெக்ஸ் வோங் என்ற வாக்காளர்    இரண்டு மணிநேரம்   காத்திருந்து  தனது வாக்கை பதிவு       செய்ததாக  தெரிவித்தார்.  இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே  அதனால் நான் கவலைப்படவில்லை என்று அவர் கூறினார்.

 31  வயதான ஐரீன் லின் என்பவர்  இது ஒரு நல்ல அனுபவம் என்றும்   நான் ஒரு போதும் வரிசையை விட்டு வெளியேற நினைத்ததில்லை. இது தேசபக்தியின் வெளிப்பாடு என்றும் அவர் சுருக்கமாகக் கூறினார்.  முன் வாயிலில் இருந்த ஒரு காவல்துறை  அதிகாரியின் கூற்றுப்படி, SJKC புக்கிட் செர்டாங்கில்  காலை 11 மணி நிலவரப்படி சுமார் 1,500 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இதற்கிடையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் OKU களை வரிசையைத் தவிர்த்துவிட்டு நேராக நுழைவாயிலுக்குச் செல்லுமாறு  அறிவுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here