அன்வாரை பிரதமர் வேட்ப்பாளராக ஆதரிக்கும் கடிதம் தே.மு உச்சமன்றத்தின் ஏகமனதான முடிவல்ல என்கிறது மசீச

கோலாலம்பூர், நவம்பர் 23:

பாக்காத்தான் ஹாரப்பானின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்ப்பாளராக ஆதரித்து, தேசிய முன்னணி கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் சமர்ப்பித்த கடிதம் தேசிய முன்னணியின் உச்சமன்றத்தின் ஏகமனதான முடிவல்ல. மாறாக அது அஹமட் ஜாஹிட்டின் முடிவு என்று மசீச கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன் தெரிவித்தார்.

மேலும் ஜாஹிட் சமர்ப்பித்த ஆதரவுக் கடிதம் தேசிய முன்னணியின் உச்ச மன்றத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நேற்றிரவு நடைபெற்ற தேசிய முன்னணியின் உச்ச மன்றக்கூட்டத்தில் குறித்த கடிதம் தொடர்பில் கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அதனை முதலில் மறுத்த ஜாஹிட் பின்னர் ஆதாரங்களை காண்பித்ததும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இதுவரை, அன்வாருக்கு ஆதரவளிப்பதில் நடுநிலை வகிக்கும் முடிவில் தேசிய முன்னணி தொடர்ந்து நிற்கிறது” என்றார்.

இன்று, 10வது பிரதமராக அன்வாருக்கு 30 தேசிய முன்னணி எம்பிக்கள் ஆதரவு அளித்தது குறித்து இஸ்தானா நெகாராவுக்கு பிஎன் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here