ஜனநாயக செயல்முறைக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐஜிபி வலியுறுத்தல்

கோலாலம்பூர்: அரசாங்கத்தின் தலைமைப் பதவி மாற்றத்தின் போது சமூகத்திற்குள் இணக்கமற்ற சூழ்நிலைகளை உருவாக்காமல் ஜனநாயக நடைமுறையை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறியுள்ளார்.

நாட்டின் 10ஆவது பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வாழ்த்திய காவல்துறை தலைமை கண்காணிப்பாளர், பொறுப்பற்ற கட்சிகள் ஆத்திரமூட்டல் மற்றும் இன அல்லது மத பிரச்சினைகளை எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்காக, திறந்த பகுதிகளில் அரசியலுடன் தொடர்புடைய எந்தவொரு பேரணி அல்லது ஊர்வலத்தையும் நடத்த வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை (நவம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகப் பயனர்கள் பொதுமக்களின் கவலையை ஏற்படுத்தும் வகையில் எதையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து மலேசியர்களின் நலனுக்காக நாட்டைப் பாதுகாப்பதில் காவல்துறை உறுதியுடன் இருக்கிறது என்றார். புதிய பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here