செந்தூல் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவர் SAC முனுசாமி காலமானார் – மலாக்கா முதல்வர் இரங்கல்

மலாக்கா, நவம்பர் 25 :

செந்தூல் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரும் மூத்த துணை ஆணையர் ஆர்.முனுசாமியின் மரணம் குறித்து மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

“இறைவன் SAC முனுசாமியை ஆசீர்வதிக்கட்டும், அவர் ஒரு பணிவான அதிகாரியாக அறியப்பட்டவர் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) சுலைமான் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

SAC முனுசாமி தனது 60வது வயதில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மெந்தகாப்பிலுள்ள அவரது வீட்டில் இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) நள்ளிரவு 12.50 மணியளவில் காலமானார்.

மறைந்த SAC முனுசாமியின் சொந்த ஊரான பகாங்கில் உள்ள மெந்தகாப்பில் இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

அவர் கடைசியாக கோலாலம்பூரில் உள்ள செராஸில் உள்ள போலீஸ் கல்லூரியில் பணிபுரிந்தார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது உடல்நிலை காரணமாக 58 வயதில் ஓய்வு பெற்றார்.

SAC முனுசாமி 1982 இல் காவல்துறையில் சேர்ந்தார் மற்றும் அக்டோபர் 2018 இல் புக்கிட் அமானுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு செந்தூல் மாவட்ட OCPD ஆகவும் இருந்தார். அக்கால கட்டத்தில் அவர் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்தியர்களின் நலன்சார் இயக்கங்களுடனும் இணைந்து அளப்பெரிய சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here