பகாங் மாநில மந்திரி பெசாராக மீண்டும் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி பதவியேற்பு

குவாந்தான், நவம்பர் 28 :

பகாங் மாநில தேசிய முன்னணியின் தலைவரம் ஜெலாய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் பகாங் மாநில மந்திரி பேசாராக இன்று காலை பதவியேற்றார்.

இது மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை வழிநடத்த அவருக்கு வழக்குழுக்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

64 வயதான வான் ரோஸ்டியின் பதவியேற்பு நிகழ்வு , பகாங் மாநில இடைக்கால சுல்தான் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னிலையில் இன்று காலை நடந்தேறியது.

கடந்த நவம்பர் 19 அன்று நடந்த 15வது பொதுத் தேர்தலில் (GE15) எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே பகாங் மாநில சட்டமன்றத்தில் 16 இடங்களை வென்ற தேசிய முன்னணியும் (BN) , 8 இடங்களை வென்ற பக்காத்தான் ஹராப்பானும் இணைந்து, பகாங்கில் கூட்டாட்சியை அமைக்கின்றன.

மேலும் தியோமன் மாநிலத் தொகுதிக்கான வாக்குப்பதிவுஎதிர்வரும் டிசம்பர் 7 அன்று நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here