நாட்டின் 10ஆவது பிரதமராக பதவியேற்ற டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான முதல் நாடாளுமன்றம் டிச.19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களும் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெறும்.
இந்த மக்களவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பெரும்பான்மை மீதான நம்பிக்கைத் தீர்மானமும் பரிசோதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
.