பள்ளிக்கூடம் அருகே சுற்றித் திரிந்த யானை பாதுகாப்பாக பிடிபட்டது

லாஹாட் டத்து      பகுதியில் உள்ள, பள்ளி ஒன்றின் வளாகத்தில் சுற்றித் திரிந்த பிக்மி ரக யானை பிடிபட்டது. அந்த ஆண் யானை நேற்று பாதுகாப்பாக பிடிபட்டதை மாநில வனவிலங்கு துறை இயக்குனர் அகஸ்டின் துகா உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் யானை சுற்றி திரிவதைக் கண்டு, சுற்று வட்டார மக்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த யானை  பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் தேபின் வனவிலங்கு பூங்காவிற்கு அந்த யானை இடமாற்றம் செய்யப்படும்     என தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள இதர யானைகளுடன் அது சுதந்திரமாக சுற்றித் திரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில், அந்த யானை பிடிபடுவதற்கு முன், அதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை என்பதையும் அகஸ்டின் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here