மக்கள் ஓசை ஆசிரியர் BR ராஜனின் தாயார் ரத்னம்பாள் கோவிந்தன் காலமானார்

மக்கள் ஓசை ஆசிரியரும் 47 ஆண்டுகள் பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் பிஆர் ராஜனின் தாயார் ரத்னம்பாள் கோவிந்தன் (84) இன்று காலமானார். தனது பத்திரிகை துறை பணிக்கு முதுகெம்புகாக இருந்தவர் என் தாயார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.  பிள்ளைகளை மட்டுமல்லாமல்  ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பேரப்பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்.

தன்னம்பிக்கை உள்ளவர். யாரிடம் கையேந்த கூடாது என்ற கொள்கையோடு தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைப்பவர். என் தந்தை பூபாலன் வீரமுத்து 2003ஆம் ஆண்டு காலமானதை  தொடர்ந்து தாயும், தந்தையுமாக இருந்தவர் என் தாயார்.

அன்னாரின் நல்லுடல் நாளை 9.12.2022 வெள்ளிக்கிழமை  No.6, Jalan SU2, Taman Selayang Utama, 68100 Batu Caves என்ற முகவரியில் இருந்து எடுத்து செல்லப்பட்டு செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here