ஜோகூர் பாரு, டிசம்பர் 11 :
மேன்மைதங்கிய ஜோகூர் ஆட்சியாளர், சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர், இன்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப்பை சந்தித்தார்.
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும், சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமான சலாவுடினுடனான சந்திப்பு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது என்று சுல்தான் இப்ராஹிமின் அவர்களுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, ஜோகூர் சுல்தானை மரியாதை நிமிர்த்தம் அவர் சந்தித்த முதலாவது சந்திப்பு இதுவாகும்.