குவாந்தான், டிசம்பர் 11 :
நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழையால், பகாங்கில் உள்ள ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 160 குடும்பங்களைச் சேர்ந்த 537 பேர் அங்குள்ள எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பகாங் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
தெமெர்லோ மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 380 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், அதைத் தொடர்ந்து லிப்பிஸில் 79 பேரும், ஜெரான்துட்டில் 34 பேரும், பெராவில் 25 பேரும் மற்றும் ரவூப்பில் 19 பேரும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், பத்து மாலிமில் உள்ள சுங்கை லிப்பிஸ், பெரா, ரவூபிலுள்ள சுங்கை ட்ரையாங் ஆகிய ஆறுகள் அபாய எச்சரிக்கை அளவைக் கடந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.