என்னிடம் நியாயமாக இருங்கள்; உடனடியாக குறைக் கூறாதீர்கள் – சைஃபுதீன் LFL க்கு கோரிக்கை

பணிக்கு வந்து ஐந்தாவது நாளில் தன்னை இவ்வளவு சீக்கிரம்  குறை கூறுவது நியாயமற்றது என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறுகிறார்.

மக்களின் கருத்துகளை நான் வரவேற்கிறேன். ஆனால் மனித உரிமைகள் குழுவான லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (LFL) எனது முந்தைய பதிவைப் பார்க்க வேண்டும். இ முடிவுகளுக்குத் தாவாமல் இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன் என்று சைபுதீன் இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

புதிதாக ஆரம்பித்துள்ள அமைச்சர் என்ற வகையில் தனது அமைச்சின் கீழ் உள்ள முகவர் நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முதலில் கேட்பது தான் நியாயம் என்றார்.

நாங்கள் இப்போது அவர்கள் அனைவருடனும் கலந்துரையாடுகிறோம். இறுதியில் நாங்கள் திட்டங்களைக் கொண்டு வருவோம். எனவே ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டாம் என்று அவர் கூறினார். நேற்று, சபாவில் உள்ள கிமானிஸ் குடியேற்ற தடுப்பு மையத்தில் “உணவு மற்றும் சுகாதார நெருக்கடியை” குறைத்து மதிப்பிட்டதற்காக சைஃபுதீனை LFL விமர்சித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here