அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்ந்தது ரிங்கிட்

இன்று காலை அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் உயர்வுடன் தொடங்கியது.  காலை 9 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிராக நாட்டின் பணமதிப்பு  4.4050/4130 ஆக வர்த்தகமானது.  இது  நேற்றைய முடிவில் 4.4260/4320 ஆக இருந்தது.

ActivTrades Trader Dyogenes Rodrigues Diniz, சமீபத்திய அமெரிக்க பணவீக்க விகிதத்தின் குறைவு முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது. அமெரிக்காவின் பணவீக்கத் தரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே வந்துள்ளது. மத்திய வங்கியின்  நெகிழ்வான நிலைப்பாட்டின் விளைவாக வட்டி விகிதங்களில் வீழ்ச்சி இருக்கலாம் என்றும் இதனால்  அமெரிக்க டாலரின் மதிப்பு குறையலாம் என்றும்   எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், முக்கிய நாணயங்களுக்கு  எதிராக ரிங்கிட் எளிதாக வர்த்தகம் செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை முடிவில் 5.4307/4381 இலிருந்து பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக உள்ளூர் பணமதிப்பு சரிந்து 5.4419/4518 ஆகவும்,  யூரோவுக்கு எதிராக 4.6646/6709 லிருந்து 4.6843/6928 ஆகவும் குறைந்துள்ளது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.2640/2689 இலிருந்து 3.2702/2767 ஆகவும், ஜப்பானிய யெனுக்கு எதிராக 3.2142/2188 இலிருந்து 3.2550/2614 ஆகவும் நேற்றய முடிவில் சரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here