பத்தாங் கலியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் 92 பேர் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) ட்வீட் படி, 53 பேர் காயமடையவில்லை. ஏழு பேர் காயமடைந்தனர். எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது. இன்று காலை, கோத்தோங் ஜெயா அருகே நிலச்சரிவில் முகாம் தளம் புதைந்ததை அடுத்து பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.