நாளை பகாங்கில் வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது – நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம்

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் வெள்ள முன்னறிவிப்பு தரவுகளின் அடிப்படையில், நாளை பகாங்கின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இரவு 8 மணி முதல் பகாங்கின் கம்போங் பெராலாஸ், கம்போங் கேடிங், ஜெராம் பங்கோர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கம்போங் மெர்டிங், குவாலா தஹான் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கம்போங் செபெராங் குவாய், ஜாலான் கம்போங் டுரியான், கம்போங் புக்கிட் இமாம் சுலோங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்; கம்போங் பெசோல், பாயா கின்தோங், கம்போங்பத்து காவா, கம்போங் பெரியான், கம்போங் ஜெரான்சாங், கம்போங் தஞ்சுங் பேதுங், கம்போங் ரியால், கம்போங் தானா நியோர், கம்போங் தேஹ், கம்போங் ஜெரான்டுட் பெரி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்வரும் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேராக உள்ளது. இவர்கள் பெக்கானின் சுங்கை மியாங்கில் உள்ள SK சினார் முத்தியாராவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here