பத்தாங் காலி நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் இரங்கல்

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் சிலாங்கூர் Tengku Permaisuri Norashikin ஆகியோர் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பத்தாங் கலி, Gohtong Jaya வில் உள்ள முகாம் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு  குறித்து வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

சிலாங்கூர் ராயல் அலுவலக முகநூல்  பதிவின் மூலம், சிலாங்கூர் ஆட்சியாளர் மற்றும் Tengku Permaisuri Norashikin  ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பல உயிர்களைக் காவு வாங்கிய இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக சிலாங்கூர் சுல்தான் கூறினார்.

முன்னதாக, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,  ஆர்கானிக் பண்ணை முகாமில், Gohtong Jaya வில்  இரவு 7.10 மணி நிலவரப்படி நிலச்சரிவு சம்பவத்தில்  21 பேர்  இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here