அனைத்துலக மரத்தோன் ஓட்டம்; மலேசியா புத்ரா பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் உயிரிழந்தார்

அலோர் செத்தார், லங்காவியில் நடந்த அனைத்துலக அரை மராத்தான் ஓட்டத்தின் போது மலேசியா புத்ரா பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். 37 வயதான நிக் முகமட் ஃபைஸ் நிக் முகமட் ஆஸ்மி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக லங்காவி பொலிஸ் தலைவர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பந்தயத்தின் இறுதிக் கோட்டின் அருகே அவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். மருத்துவ மற்றும் குடிமைத் தற்காப்புப் படைப் பணியாளர்கள் இருதய நுரையீரல் புத்துயிர் சிகிச்சையை அளித்தனர். சுல்தானா மலிஹா மருத்துவமனையின் அவசர சேவையின் மருத்துவர், ஃபைஸ் அங்கு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here