மூன்று நண்பர்களின் கடல் நீச்சல் சோகத்தில் முடிந்தது ; ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் -மற்றொருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

கோலா பென்யு மாவட்டத்தின் கம்போங் தெம்புருங்கில் உள்ள ஓய்வு விடுதிக்கு அருகிலுள்ள கடற்கரைக்கு நீராடச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார், மற்றொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

17 வயதுடைய இருவர் மற்றும் 15 வயதுடைய ஒருவருமான நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 17) பிற்பகல் கடலில் நீச்சலடித்ததாகவும் , அப்போது மழை தூறிக் கொண்டிருந்தது, கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் கோலா பென்யு தீயணைப்பு நிலையத் தலைவர், அவாங் முகமட் சப்ரி கூறினார்.

“ரிசார்ட்டில் இருந்தவர்கள், கூறித்த சிறுவர்கள் கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டனர், அவர்கள் உதவிக்கு அழைத்தபோது, உதவ ஓடினர்,” என்று அவர் கூறினார்.

அவர்களால் முகமட் ஹபிசான், 17, மற்றும் முஹமட் ஹஃபிசான், 15, ஆகிய இரு இளைஞர்களை காப்பாற்ற முடிந்தது, மறறொருவரான இக்வான் ஹைகல் என்பவர் நீருக்கடியில் காணாமல் போனார்.

மாலை 4.36 மணிக்கு தங்களுக்கு சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு அழைப்பு வந்ததாக அவாங் கூறினார். உடனே அவ்விடத்திற்கு விரைந்த நீர் மீட்பு மற்றும் பிற பணியாளர்கள் அடங்கிய குழு
மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களுக்கும் ஆரம்ப சிகிச்சை அளித்த பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“மூன்றாவது பாதிக்கப்பட்டவரைத் தேடுவதற்காக, சிறுவன் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து 2 கிமீ சுற்றளவில் மேற்பரப்பு நீர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டனர்” என்று அவாங் கூறினார்.

வானிலை மற்றும் இருள் காரணமாக தேடுதல் பணி இரவு 7.07 மணிக்கு நிறுத்தப்பட்டது என்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) காலை தேடல் மீண்டும் தொடங்கும்,” என்று அவர் கூறினார்.

மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களில், ஒருவரின் நிலை சீராக இருப்பதாகவும், மற்றவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here