ரவூப்பில் வரிசை கடையின் பின்புறம் ஏற்பட்ட நிலச்சரிவு

குவாந்தானில் இன்று ரவூப் ஜாலான் துன் ரசாக் அருகே வணிக வளாகத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று தெரிவித்துள்ளது. 15 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக Zone 3 தலைவர் ஷருல்நிஸாம் நசீர் தெரிவித்தார்.

பிற்பகல் 2.45 மணியளவில் இச்சம்பவம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது மற்றும் அப்பகுதி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது கண்காணிப்பு செய்யப்படும்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதேவேளை, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யு ஹுய் தனது முகநூல் பதிவில், ரவூப் மாநகர மன்றம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here