நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை, ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் (EPF) ஜெர்தே, தெரெங்கானு மற்றும் கோலா க்ராய், கிளந்தான் ஆகிய இடங்களில் உள்ள தனது கிளைகளை இன்று முதல் தற்காலிகமாக மூடுகிறது.
இரண்டு கிளைகளிலும் முன் சந்திப்புகளை மேற்கொண்ட உறுப்பினர்கள் வெள்ள நிலைமை தணியும் போது தங்கள் வருகைகளை பிற்காலத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஓய்வூதிய சேமிப்பு நிதி கூறியது.
அவசர பரிவர்த்தனைகளுக்கு, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளுக்கு i-Akaun வழியாக ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யலாம் அல்லது பாதிக்கப்படாத பகுதிகளில் செயல்படும் EPF கிளைகளுக்குச் செல்லலாம் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதியின் சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவலுக்கு, EPF தொடர்பு மேலாண்மை மையத்தை 03-8922 6000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.kwsp.gov.my இல் உள்ள EPF இணையதளத்தின் வழி விவரங்களை பெறலாம்.