எபிட் லூ அனுப்பிய ஆபாச படங்கள், ஆபாச செய்திகளை பார்த்தேன் என்று சாட்சி கூறினார்

பிரபல சமயப் போதகர் அனுப்பியதாகக் கூறும் பெண்ணின் தொலைபேசியில் சில ஆபாசமான செய்திகள் மற்றும் படங்களைப் பார்த்ததாக எபிட் லூவின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையில் ஃபிர்தௌஸ் வோங் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

சபா,டெனோம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்,  ஃபிர்தௌஸ் வோங் அல்லது உண்மையான பெயர் ஃபிர்தௌஸ் வோங் வை ஹங் 39, எபிட் லூவுக்கு எதிராக 7 ஆகஸ்ட் 2021 அன்று போலீஸ் புகாரைத் தாக்கல் செய்த பிறகு, “புகார்தாரர்” மற்றும் அவரது கணவரை சந்தித்ததாகக் கூறினார்.

சந்திப்பின் போது அந்த பெண்ணின் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் இருந்து அனைத்து செய்திகளையும் படங்களையும் நேரில் பார்த்ததாக ஹரியன் மெட்ரோ தெரிவித்துள்ளது. குறுஞ்செய்தியில்  எபிட் லூவிடமிருந்து ‘புகார்தாரருக்கு’ வந்த குரல் பதிவு இருந்தது. அதில் ‘உங்கள் கால்களைக் காட்டுங்கள், உங்கள் கால்களைக் காட்டுங்கள்’ என்று வாசகங்கள் இருந்தன என்று துணை அரசு வழக்கறிஞர் ஜாஹிதா ஜகாரியாவின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

“புகார்தாரர்” மற்றும் Ebit Lew அல்லது அவரது உண்மையான பெயர் Ebit Irawan Ibrahim, 37 இடையே அனுப்பப்பட்ட ஒரு ஆடவரின் பிறப்புறுப்பின் படத்தைப் பார்த்ததாகவும் சாட்சி கூறினார். “புகார்தாரர்’ மற்றும் எபிட் லூ இடையேயான உரையாடலில் ஆண் பிறப்புறுப்புகளின் படங்களையும் நான் பார்த்தேன் என்று அவர் மாஜிஸ்திரேட் நூர் அசிரஃப் சோல்ஹானி முன் கூறினார்.

மல்டிரேசியல் ரிவெர்ட்டட் முஸ்லீம் (எம்ஆர்எம்) என்ற அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) நிறுவனரும் தலைவருமான ஃபிர்தௌஸ், எபிட், அப்பெண்ணிடம்  கணவரை விவாகரத்து செய்யுமாறு புகார்தாரருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் கூறினார்.

உன் கணவரிடம் உன்னை விவாகரத்து செய்யச் சொல்லுங்கள், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்” என்று வாட்ஸ்அப் மூலம் எழுதப்பட்ட செய்தியும் இருந்தது என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 18 அன்று, சமயப் போதகர் மீது டெனோம் மாவட்டத்தில் 41 வயது பெண்ணின் மரியாதையை அவமதித்தது உட்பட 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மற்றவற்றுடன், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் பயன்பாடு மூலம் ஆபாசமான வார்த்தைகளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றமற்றவர் என்று கூறிய  Ebit க்கு முன்பு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM1,000 ஜாமீன் வழங்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சமயப் போதகர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் அனுபவிக்க நேரிடும். எபிட் சார்பில் வழக்கறிஞர்கள் ராம் சிங், கமருடின் முகமது சின்கி மற்றும் திமோதி டாவூட் ஆகியோர் ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here