மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கினார் PU அஸ்மான்

சிரம்பான், கிள்ளான் மற்றும் அம்பாங் ஆகிய மூன்று நீதிமன்றங்களில் 10 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்ட பி.யு.அஸ்மான் என்று அழைக்கப்படும் பிரபல சமய போதகர் அஸ்மான் சியா அலியாஸ் இன்று மீண்டும் இரண்டு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்.  செஷன்ஸ் நீதிமன்றத்தில் 17 வயது சிறுவனை பாலியியல்  ரீதியில் துன்புறுத்தியதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.    செப்டம்பர் 2017 இல்    இது போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளில்  தான் குற்றமற்றவர் என்று   கூறி விசாரணைக் கோரியிருந்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவுகள் 14(a) மற்றும் 14(d) ஆகியவற்றின் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி  வழங்கப்படும்.

Azman Syah வுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு உத்தரவாதத்துடன் RM7,000  அபராதத்துடன்  ஜாமீன் வழங்க  நீதிபதி Rasyihah Ghazali அனுமதித்தார். மேலும் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில்  ஆஜராகுமாறும், வழக்கில் சாட்சிகளை மிரட்ட வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here