ஒற்றுமை அரசாங்கத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்தால், சம்பந்தப்பட்டவர்கள் தடுக்கப்பட்டு வழக்குத் தொடர வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது, என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும் வரவேற்கப்படுகிறது அனால் அவை எந்தவொரு சட்டத்தையும் மீறாதவாறு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“அத்தகைய கருத்து ஏன் எழுந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அமைச்சர்களை குறைகூறுபவர்களுக்கு நீதிமன்றத்தால் சம்மன் வழங்கப்படும் என்ற செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றார்.
“பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூட ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாக கூறியிருந்தார். அவரையோ, அமைச்சர்களையோ, பிரதி அமைச்சர்களையோ விமர்சிக்க முடியாது என்று அவர் கூறவில்லை” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், சட்டத்தை மீறும் அறிக்கைகள், குறிப்பாக 3R (இனம், மதம், ராயல்டி) போன்றவற்றை மீறும் அவதூறுகளை வெளியிடக்கூடாது என்றும் தியோ வலியுறுத்தினார்.