சிறார்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி GM KLANG மொத்த வியாபாரச் சந்தையில் பள்ளி விடுமுறை – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

GM KLANG மொத்த வியாபாரச் சந்தை மீண்டும் விழாக்காலக் கொண்டாட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. ஆண்டு இறுதியின் மிகப் பிரமாண்டமான கொண்டாட்டமாக பள்ளி விடுமுறையும் கிறிஸ்துமஸ் மாலைப்பொழுதும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விழாக்காலமானது மிகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் நேசமும் பாசமும் மிக்கவர்களோடு பொன்னான நேரத்தை ஒன்றாகக் கழிப்பதற்கும் இந்தக் கொண்டாட்டம் வகை செய்கிறது.

GM KLANG Kiddos Zone Party 2022 எனும் பெயரில் பல்வேறு மனங்கவர் நிகழ்ச்சிகளைக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழலாம். இந்தக் கொண்டாட்டம் 10 டிசம்பர் 2022ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி விட்டது.

இந்த நிகழ்ச்சியில் வருகையாளர்கள் பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். Shop & Be            Surprised எனும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாடிக்கையாளர்கள் ஒரே ரசீதில் இங்குள்ள ஏதாவது ஒரு கடையில் 100 ரிங்கிட் செலவு செய்து பொருட்களை வாங்க வேண்டும்.

அந்த ரசீதைக் காட்டி ஒரு பரிசை அவர்கள் பெறலாம்.  GM KLANG மொத்த வியாபாரச் சந்தையில் சிறார்கள் பொருட்கள் விற்பனைக் கடைகள் அந்தப் பரிசுகளைச் சிறப்பாகத் தயாரித்துள்ளன என்று GM KLANG முத்திரைத் தொடர்பு நிர்வாகி நோர் சுஹாய்டா ஒஸ்மான் கூறினார்.

இந்த மொத்த விற்பனைச் சந்தையில்  இரண்டாவது முறையாக இவ்வாறான ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. GM KLANG கிளை  குழந்தைகள், சிறார்கள் பொருட்களுக்கு பெயர் பெற்றதாகும். பொம்மைகள், ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.

பெற்றோர் இந்தச் சந்தையில் தங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. பல கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளும் ஆர்வமூட்டும் கலைப் படைப்புகளும் மூன்று வாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ரசீதில் 100 ரிங்கிட்டிற்கான பொருட்களை வாங்கினால் சிறப்புப் பரிசுகளைப் பெறும் வாய்ப்புகளைப் பெறுவர் என்றும் நோர் சுஹாய்டா ஒஸ்மான் குறிப்பிட்டார்.

GM Kids Got Talent, GM Kids Cosplay  எனும் சிறார்களுக்கான போட்டிகள் 2022 டிசம்பர் 24, 25ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. GM KLANG மாஸ்கோட்கள் ஆன ஜினா, மாட் ஆகிய இருவரும்  சிறுவர்களை / சிறார்களை மகிழ்விப்பர் என்றும் நோர் சுஹாய்டா ஒஸ்மான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here