இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, சரவாக் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, அங்குள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1,207 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில், 1,150 பேர் தங்கள் வீடுகள் வெள்ளம் காரணமாகவும், 57 பேர் நிலச்சரிவு காரணமாகவும் வெளியேற்றப்பட்டனர் என்று சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகத்தின், செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட 302 குடும்பங்களைச் சேர்ந்த 1,212 பேருடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை தற்போது சற்றுக் குறைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.









