போதைப்பொருள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நபர் கூலாய் போலீசாரால் கைது

கூலாய் தாமான் சுங்கை மாஸில் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் இரண்டு கார்கள் மீது மோதியதால் 51 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிச.25 அன்று இரவு 8.15 மணியளவில் ஜாலான் புடிமான் 2 இல் ஆபத்தான முறையில் கார் ஓட்டிச் செல்வது குறித்து பொதுமக்களால்  போலீசாருக்கு  தெரிவிக்கப்பட்டதாக கூலாய் OCPD Supt Tok Beng Yeow கூறினார்.

51 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற கார், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது, சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் திங்கள்கிழமை (டிசம்பர் 26) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் மீண்டும் கூலாய் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், சோதனையில் அவருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்ததாகவும்  டோக் மேலும் கூறினார்.

சந்தேக நபரை இரத்தப் பரிசோதனைக்காக தேமெங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் கூலாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர் கஞ்சா பயன்படுத்தி இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 45 மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here