சிறையில் பெற்றோர்; சகோதரியின் நண்பர்களால் துன்புறுத்தப்பட்டதால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தாக நம்பப்படுகிறது

பத்து பஹாட்டின் செங்காராங்கில் சகோதரியின் நண்பர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்பட்ட நான்கு வயது சிறுவன், நேற்று உயிரிழந்தது என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது வீட்டில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக 23 வயது இளைஞரிடமிருந்து காவல்துறை புகாரைப் பெற்றதாக அவர் கூறினார்.

புகாரின் பேரில், பத்து பஹாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் சிறுவனின் சகோதரியின் நண்பர்கள் என நம்பப்படும் 15 முதல் 37 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களைக் கொண்ட ஐந்து பேரைக் கைது செய்தனர்.

“முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது உயிரியல் சகோதரி குறித்த சிறுவனை கவனித்துக் கொள்ளப்பட்டார், ஆனால் பின்னர் அந்தச் சிறுவன் தனது சகோதரியின் நண்பரிடம் கவனித்துக் கொள்வதற்காக ஒப்படைக்கப்பட்டார், குறித்த நண்பர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை நம்புவதாகவும், விசாரணை தொடர்வதாகவும் ” அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொலைபேசி சார்ஜர்கள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், 29 அங்குல இரும்பு கம்பிகள், ஹேங்கர்கள், மின்விசிறியின் கம்பி வலைகள் போன்ற பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி, அவரது தோழி மற்றும் புகார்தாரர் அடங்கிய சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி டிசம்பர் 31 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கமாருல் ஜமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here