பதவியில் இருக்கும் நீதிபதியை ஏஜியாக நியமிக்க வேண்டாம்: உரிமைக் குழு அறிவுறுத்தல்

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில், பணியில் இருக்கும் நீதிபதியை அட்டர்னி ஜெனரலாக  (Attorney-general)    நியமிப்பதற்கு எதிராக உரிமைகள் குழு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.  Charles Charles Hector  கூறுகையில், இதுபோன்ற நியமனங்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் சுதந்திரத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது.   ஒரு தரப்பினர் பிரதமராகவோ அல்லது அரசாங்கமாகவோ இருக்கும் வழக்குகளில் இந்த நீதிபதிகளின் சுதந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்று   அரசு சாரா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Charles Hector  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர்   அன்வார் இப்ராஹிம்,     உயர் நீதிமன்ற நீதிபதிகள்  Wan Ahmad Farid Wan Salleh  மற்றும் Ahmad Fairuz Zainol Abidin       ஆகியோரின் பெயர்களை இந்த    பதவிக்கு பரிசீலித்ததாக     நம்பதகுந்த  வட்டாரங்களிலிருந்து  செய்திகள் வெளியாகியுள்ளன.   Federal  நீதிமன்ற நீதிபதி Zabidin Diah  மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் Yaacob Sam மற்றும் Abdul Karim Abdul Jalil. ஆகிய மூன்று நீதிபதிகள் அன்வாரின் நியமனத்திற்கான பரிசீலனையில் இருப்பதாக   வேறு ஒரு செய்தியில்   தெரியவந்துள்ளது.   இருப்பினும், இந்த நீதிபதிகள் ஓய்வு பெறும் வரை பெஞ்சில் இருக்க வேண்டும் என்று ஹெக்டர் கூறினார்.

ஏஜி பதவிக்கு சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பதற்கும்  எதிர்ப்புத் தெரிவித்த அவர், குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் “cooling-off period”  இருக்க வேண்டும் என்று கூறினார்.  பதவியைப் பரிசாகக் கொடுப்பதாகக் கருதப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கூறினார்.  பெடரல் ஆலோசகர் அல்லது வழக்கறிஞர் போன்ற மூத்த பொது அதிகாரி அல்லது ஏதேனும் ஒரு வழக்கறிஞரை AG ஆக நியமிக்க வேண்டும் என்று ஹெக்டர் பரிந்துரைத்தார்.

வரலாற்று ரீதியாக, பதவியில் இருக்கும் நீதிபதியை ஏஜியாக நியமிப்பது அரசின் வழக்கம். மறைந்த Mohtar Abdullah,, Apandi Ali, மற்றும் தற்போதைய அதிகாரி Idrus Harun ஆகியோரும் ஏஜியாக நியமிக்கப்படுவதற்கு நீதிபதிகளாக இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here