ஜெம்புல்:
கடந்த ஒரு வருடமாக தனது 13 வயது வளர்ப்பு மகளை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் 34 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, ஸ்டால் உதவியாளராகப் பணிபுரியும் சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 29) கைது செய்யப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டதாக ஜெம்புல் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, பத்து கிகிரில் உள்ள அவர்களது வீட்டில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியதாக ஹூ கூறினார்.
சந்தேக நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது, இரவு 8 மணியளவில் தான் அறையில் படுத்திருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.
பின்னர் அவர் தனது மூத்த சகோதரியிடம் குறித்த சம்பவம் பற்றி கூறினார், மேலும் அவர் போலீஸ் புகாரை பதிவு செய்யும்படி கூறியதாகவும்,” வெள்ளிக்கிழமை (டிச. 30) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
புகார் கிடைத்த இரண்டு மணி நேரத்தின் பின்னர் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். குறித்த சந்தேக நபரை ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து போலீசார் உத்தரவைப் பெற்றதாகவும் ஹூ கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 376பி பிரிவின் கீழ், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் ஆறு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்காலிகமாக அவரது பாட்டியின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.