பெட்டாலிங் ஜெயா:
2022 ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் தெரிவித்தார்.
அதாவது இந்தாண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான நடவடிக்கையில், மொத்தம் 9,741 பேர் ஆய்வு செய்யப்பட்டனர். அதில் 246 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 85 பேருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 194 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள வழக்குகள் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தருவாயில் உள்ளன,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (டிச. 30) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் அனைத்து சட்ட ஒழுங்குகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும், சாலை பாதுகாப்பை பாதுகாக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.