கைது செய்யப்பட்ட பிறகு பத்திரிகையாளரின் மடிக்கணினியை பாகிஸ்தான் ‘முகவர்’ பெற விரும்பினார்

காணாமல் போன பத்திரிகையாளர் சையத் ஃபவாத் அலி ஷாவின் மடிக்கணினியை கோலாலம்பூர் இல்லத்தில் வைத்து பாகிஸ்தான் “முகவர்” தேடி வந்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர் பி.வேதமூர்த்தி கூறினார். தனது சொந்த நாட்டில்  துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஃபவாத்,  ஆகஸ்ட் 23 முதல் காணவில்லை.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர்  கைருல் டிசைமி டாவுட்டிற்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், ஃபவாத்தின் மனைவியின் கூற்றுப்படி, காவலில் வைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஃபவாத்தின் மடிக்கணினியை அவரது வீட்டுத் தோழனிடமிருந்து முகவர் கோரியதாக வேதா கூறினார்.

ஃபவாத்தின் மனைவி சையதா வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 23, 2022 அன்று பங்சார், லக்கி கார்டனுக்கு அருகிலுள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் குடிநுழைவுத் துறையால் ஃபவாத் தடுத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுவதாக வேதா கூறினார்.

எனது கட்சிக்காரர் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரியுடன் ஆகஸ்ட் முதல் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் பேசி வருகிறார். மேலும் ஃபவாத் உங்கள் துறையால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார் என்று கடிதம் கூறுகிறது.

ஆகஸ்ட் 23 முதல் ஃபவாத் மற்றும் அவரது மனைவிக்கு இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு பாகிஸ்தானிய முகவர், அவர் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டுத் தோழரிடம் ஃபவாத்தின் லேப்டாப்பைக் கோருவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பிரச்சினையில் குடிநுழைவுத் துறையின் மௌனம் கேள்விக்குறியானது என்றும்,  ஏதோ தவறு நடந்திருப்பதாக என்று தான் சந்தேகிப்பதாகவும் வேதா கூறினார்.

ஃபவாத் தற்போது உங்கள் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பதையும், அப்படியானால் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் கைருலிடம் கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் நீங்கள் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம் (UNHCR) வழங்கிய அகதிகளுக்கான அட்டையை வைத்திருக்கும் 41 வயதான ஃபவாத், அரசாங்கத்தின் ஊழல் தொடர்பாக பல ஆங்கில நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் தொடர்பாக பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி மலேசியாவில் புகலிடம் கோரியிருந்தார்.

அனைத்துலக ஊடக கண்காணிப்பு அமைப்பான watchdog Reporters Without Borders (RSF) ஃபவாத் காணாமல் போனது மிகவும் கவலையளிக்கிறது என்று கூறியது. பாகிஸ்தான் தனது ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது நன்கு கவனிக்கத்தக்கது என்று கூறியது. இது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் 157 இடத்தில் உள்ளது.

ஃபவாத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டால், பாகிஸ்தானின் பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதற்கு மலேசியா உடந்தையாக இருக்கும் என்றும், இது 2023 பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவின் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றும் அது கூறியது. இதற்கிடையில், பெயர் தெரியாத நிலையில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆதாரம் எப்ஃஎம்டியிடம், ஃபவாத் தடுத்து வைக்கப்படவில்லை அல்லது நாடு கடத்தப்படவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here