நேற்றிரவு ஆற்றில் தனியாக மீன்பிடிக்கச் சென்ற 16 வயது வாலிபர் நீரில் மூழ்கி மரணம்

பெந்தோங்:

நேற்று இரவு 9.00 மணியளவில் ஆற்றில் தனியாக மீன்பிடிக்கச் சென்ற 16 வயது வாலிபர் ஒருவர், இன்று மாலை 3.55 மணியளவில் நீரில் மூழ்கி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

ஃபெல்டா கெமாசுல், கெமோமோய், காராக் என்ற முகவரியைக் கொண்ட பாதிக்கப்பட்ட முஹமட் பிர்தௌஸ் யுஸ்ரி என்பவர், ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனதாக கிடைத்த தகவலின் பேரில், காரக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து பதினைந்து உறுப்பினர்கள் மற்றும் 3 இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள், அங்கு பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானதாக நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கண்டுபிடித்தனர் என்று, நடவடிக்கை அதிகாரி ஹம்சா அஜீஸ் கூறினார்.

“தீயணைப்புப் படையினர், அப்பகுதியைச் சுற்றியுள்ள நிலம் மற்றும் ஆற்றங்கரைகளில், நேற்று இரவு மற்றும் இன்று காலையும் சோதனை நடத்திய பின்னர், இன்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here