ஜோகூர் பாரு:
ஜாலான் குபூர், கம்போங் பகர் பத்து என்ற இடத்தில் உள்ள மொத்தம் 10 குடிசை வீடுகள் நேற்று தீயில் எரிந்து நாசமானது.
ஜோகூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரவு 7.11 மணிக்கு சம்பவம் தொடர்ந்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 16 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அங்கு வந்தபோது, அந்தக் குடியிருப்பில் மக்கள் வசிக்கவில்லை என்பதால், எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.