ஜோகூரில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என நம்பப்படும் மூவர் கைது …!

ஜோகூர் பாரு:

நேற்று கெம்பாஸைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் RM 80,000 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் வைத்திருந்த. போதைபொருள் விற்பனையாளர்கள் என நம்பப்படும் உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாலை 6.25 மற்றும் நள்ளிரவு 12.40 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், 2.216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 143.75 கிராம் சியாபு (மெத்தாம்பெட்டமைன்) ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும் அவற்றின் மதிப்பு RM80,787 என்றும் ஜோகூர் பாரு வடக்கு காவல்துறையின் தலைவர், கண்காணிப்பாளர் ஃபரிஸ் அமார் அப்துல்லா தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 32 முதல் 43 வயதுடைய மூன்று உள்ளூர் நபர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் நம்பப்பட்டதாகவும், அவர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் மூவரும் மெத்தம்பேட்டமைனுக்கு நேர்மறை பதிலை பெற்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர்களிடமிருந்து Volkswagen Polo மற்றும் Yamaha Y16 மற்றும் Yamaha Ego LC மோட்டார் சைக்கிள்கள் மற்றும் RM500 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு RM127,087 ஆகும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் ஒருவருக்கு ஏற்கனவே ஆறு போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகள் இருந்ததாகவும், மற்ற இருவருக்கு மூன்று மற்றும் ஒரு முந்தைய குற்றங்களுக்கு தண்டனை பெற்றிருப்பதாகவும் ஃபரிஸ் அமார் கூறினார்.

“அவர்கள் மூவரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வழிசெய்கிறது ” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here