13 அமைச்சர்களுக்கான அரசியல் செயலாளர்கள் நேற்று உறுதி மொழி

கோலாலம்பூர்:

அமைச்சரவையை சேர்ந்த 13 அமைச்சர்களுகான மொத்தம் 13 அரசியல் செயலாளர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் அரசியல் செயலாளராக பண்டார் துன் ரசாக் பிகேஆர் பிரிவுத் தலைவர், அஸ்மான் அபிடின் நியமிக்கப்பட்டதாகவும், அஸ்மான் அபிடின் தலைமையில் விழா நடந்ததாகவும் பிரதமர் தனது முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார்.

இதில் மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளராக வி. ரவீந்திரன் உறுதி மொழி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here