முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் மீண்டும் தான் அரசாங்கத்தில் பணியாற்றலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் பேசியதாகவும், அவர் பணியாற்ற தயாராக இருக்குமாறும், உங்கள் ஓய்வுநாள் விரைவில் முடிவடையும் என்றும் பிரதமர் கூறியதாக, மஸ்லீ தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அவர் என்ன பங்கு வகிக்கப் போகிறார் என்பது தொடர்பில் பிரதமர் எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும் மஸ்லீ கூறினார். பிகேஆர் மத்திய தலைமைக் குழு கூட்டத்தின் போது மஸ்லீ அன்வாரை சந்தித்ததாக நம்பப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில், மக்கள் மற்றும் நாட்டின் செழிப்புக்கான சீர்திருத்தங்களுக்கு பிகேஆர் மத்திய தலைமைக் குழுவிற்கு அவர் உறுதியாக ஆதரவளிப்பதாகக் கூறினார்.