பேரராக்கின், கோல கங்சார் அருகே தெற்கு நோக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 235.6 ஆவது கிலோமீட்டரில், டிரெய்லர் மோதியதில் சாலையோரத்தில் நின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உயிரிழந்த 37 வயதான கார்த்திகாயினியும் ஏனைய மூன்று பேரும் பயணித்த ஹோண்டா சிவிக் ரக கார் பழுதடைந்ததைத் தொடர்ந்து, சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்ட பிறகு, குறித்த பெண் அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, டிரெய்லர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
அதே நேரத்தில் காரில் பயணித்த ஏனைய மூன்று நபர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
“இறந்தவரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.