ஏரியில் குளித்தபோது காணமல்போனதாக தேடப்பட்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

இன்று தாசேக் செர்மினியில் உள்ள ஏரியில் குளித்தபோது காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த மாணவன், உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் நீரில் மூழ்கியதாக நம்பப்படும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில், இன்று நண்பகல் 2.15 மணியளவில் தீயணைப்பு வீரர்களால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் நோராசாம் காமிஸ் கூறினார்.

உயிரிழந்தவர் SMK Kapar Indah  தேசியப்பள்ளியின் மாணவன் என்றும் அவரது  சடலம் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ஏழு வாலிபர்கள் ஏரியில் குளித்தபோது, ஒருவரைக் காணவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here