லோரி மற்றும் கார் விபத்துக்குளாகி தீப்பிடித்து எரிந்தததில் இருவர் உடல்கருகி மரணம்

கோலக் கிராவ், ஜாலான் தெமெர்லோவில் உள்ள கம்போங் டத்தோ ஷெரீப் அஹ்மட் என்ற இடத்தில் இன்று லோரி மற்றும் காரை உட்படுத்திய விபத்தில், தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கிக்கொண்ட இருவர் உடல்கருகி மரணமடைந்தனர்.

இன்று காலை 10.48 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கார் மற்றும் லோரி என்பன தீப்பற்றி எரிந்தது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா தெரிவித்தார்.

“குறித்த விபத்தில் கார் 100 சதவீதம் எரிந்து நாசமானது, லோரி 80 சதவீதம் சேதமடைந்தது. இதில் சிக்கிக்கொண்ட இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் , உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here