Teluk Kumbar இல் கெத்தும் நீர் விற்றதாக நம்பப்படும் இரு உள்ளூர் ஆடவர்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
23 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேக நபர்களும் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட சோதனையில், அவர்களிடமிருந்து RM1,260 மதிப்புள்ள சுமார் 126 லிட்டர் பதப்படுத்த தயாராக இருந்த கெத்தும் நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வழக்கு “விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது” என்றும், இன்று வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.