சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜோகூர் தீயணைப்புத் துறையினரால் 182 வளாகங்கள் ஆய்வு

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் 182 பொது இடங்களில், ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீயணைப்பு சம்மந்தமான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.

அவ்வளாகங்களில் தீ ஏற்பட்டால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு அமைப்பு நல்ல நிலையில் உள்ளதா என்பதையும், அவை அவசரமான தருணங்களில் செயல்படுவதையும் உறுதிச் செய்யவுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, ஜோகூர் தீயணைப்புத் துறையின் பதில் இயக்குநர், துணை தீயணைப்பு ஆணையர் முகமட் ரிசல் புவாங் கூறினார்.

“குறிப்பாக வளாகங்களிலிருந்து வெளியேறும் பாதைகள் தடைபடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம், ஏனெனில் அவசரநிலை ஏற்பட்டால் மக்கள் கூடும் பகுதியிலிருந்து தப்பிப்பது கடினம்” என்று, இன்று புக்கிட் இன்டா வணிக வளாகத்திலுள்ள AEON இல் நடந்த சீனப் புத்தாண்டு 2023 பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் Ops பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

“எமது துறை ரிசார்ட்ஸ், கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் திறந்தவெளிப் பகுதிகளிலும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது” என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here