பார்ட்டி பங்சா மலேசியா (PBM) பகாங் மாநிலக் குழுவின் 8 பிரிவுகள் கலைப்பு

குவாந்தான்: பகாங் பார்ட்டி பங்சா மலேசியா (PBM) அதன் மாநிலக் குழுவையும், சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட எட்டு பிரிவுகளையும் கலைப்பதாக அறிவித்துள்ளது.

பகாங் PBM தகவல் தலைவர் முகமட் பைசல் ஹெல்மி சனிக்கிழமை (ஜனவரி 14) இரவு பெர்னாமாவுக்கு அளித்த அறிக்கையில், முன்னதாக நடந்த கூட்டத்தில் அதன் தலைமைக் குழுவின் ஏகமனதான ஒப்புதலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டது.

PBM நிறுவனர் டத்தோ ஜுரைடா கமருடின் கட்சியை வழிநடத்துவதற்கு வழி செய்வதாக அளித்த வாக்குறுதியை மீறிய PBM தலைவர் (டத்தோ லாஃரி சாங் வெய் ஷியேன்) மீது நம்பிக்கை இழந்ததால் கலைக்கப்பட்டது  என்று அவர் கூறினார்.

ரவூப், இந்தரா மஹ்கோத்தா, குவாந்தான், பாயா பெசார், தெமர்லோ, பெந்தோங், பெரா மற்றும் ரொம்பின் ஆகிய எட்டு பிரிந்த பிரிவுகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here