லோரி மற்றும் கார் மோதிய விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

Jalan Jerantut-Temerloh, Kuala Krau சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் கார் மற்றும் லோரி மோதிய விபத்தில், உடல்கருகி பலியானவர்களில் ஒருவர் 35 வயதுடைய மலாய்க்காரர் என அடையாளம் காணப்பட்டார், அதே வேளை மற்றையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெமெர்லோ மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் அசார் முகமட் யூசோப் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்டபோது புரோத்தோன் பெர்சோனா காரில் சென்று கொண்டிருந்தவர் Kampung Pinang, Mukim Sok, Sik, Kedah பகுதியைச் சேர்ந்த மலாய்க்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றையவர் அதாவது அந்தக் காரின் ஓட்டுநர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 09-2716086 அல்லது தெமெர்லோ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் நிஜாம் 019-2343449 என்ற எண்ணில் விசாரணைக்கு உதவுமாறு அவர் நம்புகிறார்.

நேற்று, புரோத்தோன் பெர்சோனா கார் மற்றும் மண் ஏற்றிச் சென்ற லோரி மோதிய விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில், காருக்குள் சிக்கிக்கொண்ட இருவர் உடல்கருகி உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here