கோலாலம்பூர் மாலில் உள்ள ஷூ கடை (செருப்பு கடை) தீயில் எரிந்து நாசமானது

Mines ஷாப்பிங் மாலில் உள்ள ஷூ கடையில் (செருப்பு கடை) தீயில் எரிந்து நாசமானது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) காலை 11.52 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார். மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து நாசமானது என்று அவர் கூறினார்.

மதியம் 12.25 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நோராஸாம் மேலும் தெரிவித்தார். தீ விபத்திற்கான காரணத்தை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here