16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமை ஆசிரியர் மீது 13 குற்றச்சாட்டு

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பள்ளி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, 13 குற்றச்சாட்டுகளுடன் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர் இன்று அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும், நீதிபதி நூரியா ஓத்மான் முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 58 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, மாறாக வழக்கை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குற்றச்சாட்டின் அடிப்படையில், உடல்ரீதியான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மொத்தம் 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(f) இன் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (AKSTKK) 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 11 (a) இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், AKSTKK 2017 இன் பிரிவு 14 (c) மற்றும் பிரிவு 14 (d) இன் கீழ் தலா ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பிரம்படித் தண்டனையும் விதிக்கப்படலாம்.

வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கு பிப்ரவரி 20 தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் RM30,000 பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here