முதலாளியின் நகைகளுடன் தப்பி ஓடிய இந்திய நாட்டுப் பணிப்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

உடல் ஊனமுற்ற பெண் (OKU) முதலாளியின் நகைகள் மற்றும் பணத்தை அவரது வீட்டில் வேலைசெய்துவந்த இந்திய நாட்டுப் பணிப்பெண் திருடிச் சென்றதால், முதலாளிக்கு RM4,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அய்டி ஷாம் முஹமட் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த திங்கட்கிழமை நண்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்ட 38 வயது ஊனமுற்ற பெண்ணிடம் இருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது என்று அவர் கூறினார்.

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது, ​​குறித்த பணிப்பெண் அவரது அறையில் இல்லை என்பதை உணர்ந்ததாகவும் அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்குள் சோதனை செய்ததில், அவரது மற்றும் அவரது மகனின் நகைகள், அதாவது இரண்டு காதணிகள், ஒரு நெக்லஸ் மற்றும் ஒரு வளையல் மற்றும் RM2,000 ரொக்கம் ஆகியவை காணவில்லை. காணாமல்போன நகை மற்றும் பணத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த இழப்பு சுமார் RM4,000″ என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் குறித்த பணிப்பெண்ணை டிசம்பர் 2022 இன் தொடக்கத்தில் பணியமர்த்தியதாகவும் சந்தேக நபருக்கு RM1,200 சம்பளம் கொடுத்ததாகவும் கூறினார். மேலும் பணிபுரியும் போது, ​​சந்தேக நபருக்கு தங்குமிடம், மொபைல் போன் மற்றும் உணவு என்பன வழங்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

வழக்கு விசாரணைக்காக பாஸ்போர்ட் எண் (V8403923) மூலம் 30 வயதான ஜோதி குமாரை போலீசார் தேடிவருவதாகவும், இவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள், புலனாய்வு அதிகாரி, சார்ஜென்ட் நூர் அசிகின் கமாருடினை 012-9310852 என்ற எண்ணில் அல்லது போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமையகம் 06-647 2222 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here