மீன் பிடிக்க சென்றபோது காணாமல் போன இருவர் பூலாவ் தியோமானில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்

கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இருவர், நேற்று Teluk Juara, Pulau Tioman, Rompin இல் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

சியா ஸ்வீ க்வாங், 49, மற்றும் ஜுல்ஃபாமி இசுடின் கான் அப்துல்லா, 45, என்ற இருவரும் பிற்பகல் 2.30 மணியளவில் பலவீனமான நிலையில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக, மலேசிய கடல்சார் அமலாக்க துறையின் பகாங் மாநில இயக்குநர் First Admiral Maritime Kamal Ariffin Jusoh தெரிவித்தார்.

குறித்த இரண்டு ரிசார்ட் பணியாளர்களும் Teluk Juara விலிருந்து மீன்பிடிப்பதற்காக ஃபைபர் படகில் சென்றதாகவும், ஆனால் திட்டமிட்டபடி அதே நாளில் அவர்கள் திரும்பத் தவறியதாகவும், அவர்களது கைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களின் படகில் எரிபொருள் தீர்ந்ததாகவும், பெரிய கடல் அலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது அப்படகு கவிழ்ந்ததாகவும் கூறினர். அத்தோடு அவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், அருகிலுள்ள கரைக்கு நீந்திச் சென்றதால், பாதுகாப்பாக உயிர் தப்பினர், ”என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட இருவரும் மேல் சிகிச்சைக்காக அவர்கள் Pulau Tioman இல் உள்ள ஹெல்த் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கமால் அரிஃபின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here