குறுகிய காலத்தில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க கூட்டரசிடமிருந்து மொத்தம் 27 மில்லியன் ரிங்கிட் பாகங் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பகாங் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
வடிகால்களை அகலப்படுத்துதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்பைச் சரிசெய்தல் போன்ற வெள்ளப்பெருக்கைக் குறைக்க உதவும் பணிகளைச் செயல்படுத்த இந்த ஒதுக்கீடு முடிந்தவரை பயன்படுத்தப்படும் என்றார்.
“சமீபத்தில், நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம், வெள்ளத்தால் அவ்வளவு மோசமாக எமது மாநிலம் பாதிக்கப்படவில்லை என்றாலும், இந்த விஷயத்தை நான் மத்திய அரசுக்குக் கொண்டு வந்து, குறுகிய கால வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், இந்த மேம்பாட்டு வேலைத்திட்டங்களால் வெள்ளத்தைக் குறைக்க உதவும் என்றும் கூறினேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இன்று குவாந்தான் மாவட்ட வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 206 குடும்பத் தலைவர்களுக்கு (KIR) செகோலா கெபாங்சான் பெலிண்டுங்கில், நிதி உதவியை வழங்கிய பின்னர் வான் ரோஸ்டி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
மேலும் நிவாரண மையங்களுக்குச் சென்ற 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலா RM1,000 நிதியுதவியைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அவர்களுக்கு இந்த உதவி பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.