இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 107 பேர், நேற்று தாவாவ் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்று சபா குடிநுழைவு துறை இயக்குநர், டத்தோ Sh Sitti Saleha Habib Yusoff தெரிவித்தார்.
14 முதல் 63 வயதுக்குட்பட்ட 96 ஆண் மற்றும் 11 பெண் கைதிகள், கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அவர்களது நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
“அவர்கள் அனைவரும் தாவாவ் மற்றும் சண்டகான் குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், Sh Sitti Saleha இந்த நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டினர் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் மற்றும் சபாவில் வேலை செய்ய பணி அனுமதிகளை வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.